TNPSC Thervupettagam

கல்லீரல் அழற்சிக்கு உட்கொள்ளும் மருந்துகள் – ஹரியானா

November 13 , 2017 2597 days 869 0
  • ஹெபடைடிஸ்-சி (Hepatitis-C) வகை கல்லீரல் அழற்சி நோய்க்கு அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஹெபடைடிஸ்-சி நோயாளிகளுக்கு வாய்வழி உட்கொள்ளத்தக்க  மருந்துகளைக் (Oral Medicine) கொண்டு சிகிச்சை அளிக்கவல்ல நாட்டின் முதல் மாநிலமாக ஹரியானா உருவாகியுள்ளது..
  • இதற்காக முதல் முறையாக ஹரியானா மாநிலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வாய்மொழியாக உட்கொள்ளும் ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.
  • மாவட்ட அளவில் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த நிரந்தர குடியிருப்பு வாசிகளுக்கு இம்மருந்து இலவசமாக வழங்கப்படும்.
  • கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலில் உள்ள செல்கள்  வீக்கத்துடன் காணப்படும் நிலை ஆகும். நோய் தொற்றின் வகையைப் பொறுத்து உடலில் உண்டாகும்  சிக்கல்கள் வேறுபடும்.
  • ஹெபடைடிஸ் வகை வைரஸ்களால் இந்நோய் ஏற்படுகிறது.
  • ஒவ்வொரு கல்லீரல் அலற்சி வகை  நோயும் வெவ்வேறு ஹெபடைடிஸ்  வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. கல்லீரல் அழற்சி / ஹெபடைடிஸ் ஐந்து வகைப்படும். அவை,
  1. ஹெபடைடிஸ் – ஏ
  2. ஹெபடைடிஸ் - பி
  3. ஹெபடைடிஸ் - சி
  4. ஹெபடைடிஸ் – டி
  5. ஹெபடைடிஸ் - ஈ

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்