TNPSC Thervupettagam

கல்வி அமைச்சகத்தின் அறிக்கை

June 4 , 2023 415 days 236 0
  • 2021-2022 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பில் சேர்ந்த சுமார் 35 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் சேரவில்லை.
  • இந்த 35 லட்சம் மாணவர்களில் 27.5 லட்சம் பேர் பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ள நிலையில், மேலும் 7.5 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வினை எழுதவில்லை.
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இந்தியச் சான்றிதழ் கல்விச் சபை ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் தோல்வி விகிதம் 5% வரை குறைவாக உள்ளது.
  • ஆனால் மாநிலக் கல்வி வாரியங்களில் இது 16% என்ற அளவில் அதிகமாக இருந்தது.
  • தவறிய 35 லட்சம் மாணவர்களில் 4.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேசியத் திறந்த நிலைக் கல்வி நிறுவனம் மூலம் தேர்வு எழுதுகின்றனர்.
  • மேலும், தேசியத் திறந்தநிலைக் கல்வி நிறுவனத்தில் பதிவான தோல்வி விகிதமும் 47% முதல் 55% வரையிலான வீதத்தில் உள்ளது.
  • 85% அதாவது கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்களின் இடைநிற்றல் 11 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • அவை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அசாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகியனவாகும்.
  • மேகாலயாவில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் 57% என்ற அளவில் குறைவாக உள்ளது.
  • தேர்ச்சி விகிதமானது மத்தியப் பிரதேசத்தில் 61 சதவீதமாகவும், ஜம்மு காஷ்மீரில் 62% ஆகவும் உள்ளது.
  • இது பஞ்சாப் மாநிலத்தில் 97.8% ஆகவும், கேரளாவில் 99.85% ஆகவும் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்