TNPSC Thervupettagam

கல்வி அமைச்சகத்தின் அறிவிப்புகள்

September 10 , 2021 1079 days 501 0
  • தமிழக மாநில அரசானது வழக்கமானப் பள்ளி நேரத்திற்குப் பிறகு VI முதல் XII வரையிலான வகுப்புகளில் பயில்வோருக்கு ஆங்கில மொழிப் பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலிஷ்) வகுப்புகளை அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது என மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார்.
  • புகழ்பெற்ற தமிழ் படைப்புகள் மற்ற திராவிட மொழிகளிலும், திராவிட மொழிப் படைப்புகள் தமிழிலும் மொழி பெயர்க்கப்படும் (பொன்னியின் செல்வன் மற்றும் வைக்கம் போராட்டம்: தமிழிலிருந்து ஆங்கிலம்; கலைஞர் கருணாநிதியின்  திருக்குறள் மீதான உரை (தமிழிலிருந்து தெலுங்கு); டி ஜானகிராமன் சிறுகதைகள் (தமிழிலிருந்து கன்னடம்).
  • கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், மல்யுத்தம் போன்றப் பாரம்பரியக் கலைகள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
  • சென்னையில் உள்ள  கன்னிமாரா பொது நூலகம் நவீனப்படுத்தப்படும்.
  • குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகள் தடுப்பு வாரமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 15 முதல் 22 வரை அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணிதத்தைக் கற்பிக்க வேண்டி பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படும் போது எண்ணும் எழுத்தும்என்ற ஒரு திட்டமானது தொடங்கப்படும்.
  • சேலம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில்  தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திற்காக வேண்டி மேலும் நான்கு மண்டல மையங்கள் அமைக்கப்படும்.
  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவர் படிப்பிற்கான திட்டங்கள் வழங்கப் படுவதோடு கட்டிடக் கலை மற்றும் இயந்திரப் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டயப் படிப்புகள் அடுத்த ஆண்டு தமிழில் தொடங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்