சமயம் மற்றும் மொழி சார் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு விதியைப் பின்பற்றத் தேவை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்பின் 15(5)வது சட்டப் பிரிவானது, 2005 ஆம் ஆண்டில் 93வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது சமூக அல்லது கல்வியில் பிற்படுத்தப் பட்ட குடிமக்கள் அல்லது பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் கல்வி நிறுவனங்களில் அவர்களது சேர்க்கை தொடர்பான சிறப்பு விதிமுறைகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளித்த அதே நேரத்தில், சிறுபான்மை நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கிறது.
மேலும், 2006 ஆம் ஆண்டு சட்டத்தின் 2(d) பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள ‘தனியார் கல்வி நிறுவனம்’ என்பதன் வரையறையிலிருந்து அரசியலமைப்பின் 30(1)வது சட்டப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட சிறுபான்மை நிறுவனங்களையும் விலக்குகிறது.