பல்கலைக்கழக மானியக் குழுவானது, உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்லூரிப் பட்டங்களுக்கான புதியப் பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வித் துறையைப் பொருட்படுத்தாமல், அனைத்து நான்கு ஆண்டு கால இளங்கலைப் படிப்புகளுக்கும் இளங்கலை அறிவியல் (BS) பட்டங்களை வழங்குவதற்கு வேண்டி இது பரிந்துரைத்துள்ளது.
பல்கலைக் கழகங்கள் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு என்று முதுகலை அறிவியல் (MS) என்ற பெயர் முறையினை பின்பற்றலாம் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.
கலை, மானுடவியல், மேலாண்மை மற்றும் வணிகம் போன்ற அறிவியல் சாராத கல்விப் பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.
நான்காண்டு கால இளங்கலை மேதகைமைப் படிப்புகளுக்கு ‘மேதகைமைப் பட்டம்' என்ற அந்தஸ்தினை அறிமுகப்படுத்தவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நான்காண்டு கால இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு BA (Hons), BCom (Hons), அல்லது BS (Hons) போன்று அடைப்புக் குறிக்குள் ‘மேதகைமைப் பட்டம்' குறிப்பிடப் படும்.
இந்தியாவில் வழக்கமாக, இளங்கலை அறிவியல் (BSc) பட்டப்படிப்புகள் அறிவியல் பாடங்களுடன் தொடர்புடையவை ஆகும்.
மேலும், இளங்கலை (BA) பட்டப்படிப்புகள் கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றினை உள்ளடக்கியது ஆகும்.