TNPSC Thervupettagam

களரிப் பயற்று மற்றும் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

January 25 , 2025 3 days 77 0
  • களரிப் பயற்று கலையானது, 2023 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் போட்டிப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இருப்பினும், இந்தக் கலை வடிவம் ஆனது இந்த ஆண்டில் ஒரு செயல்விளக்கப் போட்டி நிகழ்வாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • களரிப் பயற்றுக் கலையானது உலகின் பழமையான மற்றும் மிகவும் அறிவியல் ரீதி ஆன தற்காப்புக் கலை வடிவங்களில் ஒன்றாகும்.
  • கேரளாவில் தோன்றிய இந்தக் கலையானது அங்குப் பரவலாகப் பயிற்சி செய்யப் படுகிறது.
  • ஒன்றுக்கொன்று சற்று வேறுபடுகின்ற வடக்கு மற்றும் தெற்கு எனப்படும் இரண்டு வகையான களரிப்பயற்று கலைகள் உள்ளன.
  • வடக்கு வகையில், தெற்கு வகையை விட மிக அதிகமான ஆயுதங்கள் பயன்படுத்தப் படுகின்றன என்பதோடு வடக்கு களரியில் உள்ள அனைத்து உடல் இயக்கங்களும் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி என ஒரே நேர்கோட்டில் உள்ளவாறு அமைகின்றன.
  • இருப்பினும், தெற்கு களரியில், மக்கள் அதைப் பயிற்சி செய்யும் போது அவர்கள் எந்த திசையிலும் நகரலாம்.
  • கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஷாவ்லின் என்ற ஒரு கோவிலில் போதிதர்மர் அவர்களால் இந்தக் களரிப் பயற்றுக் கலையானது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்