இந்தியாவில் களரிப் பயிற்று (களரிப் பயட்டு) எனப்படுகின்ற ஒரு கலை வடிவத்தினை மேம்படுத்துவதற்காக என்று இந்தியக் களரிப் பயிற்று கூட்டமைப்பானது மண்டல விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தோன்றிய இந்தப் பாரம்பரிய தற்காப்புக் கலையானது, போர் வீரரான பரசுராமரால் நிறுவப் பட்டதாக நம்பப்படுகிறது.
"களரிப் பயிற்று" என்ற சொல் மலையாளத்தில் "களரி" (போர் நடைபெறும் இடம்) மற்றும் "பயிற்று" (சண்டை) ஆகிய சொற்களின் இணைவாகும்.