சிவகங்கையிலுள்ள கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வின் போது அங்குள்ள ஓர் இடத்தில் டெரகோட்டா கொள்கலன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இது அதன் மேற்பரப்பினூடே செல்லும் ஒரு சிக்கலான வடிவமைப்புடன் கூடிய பட்டையைக் கொண்டுள்ளது.
இது பல அடுக்குகளைக் கொண்டிருப்பதால் இது வளைய வடிவ கிணற்றின் ஒரு பகுதியா அல்லது தானியம் சேமிக்கும் ஒரு கலனா என்று தெரியவில்லை.
இதில் கட்டை விரல் பதித்தது போன்ற குழிகளைக் கொண்ட ஒரு பட்டையையும் இடையிடையே ஆழமான கோடுகள் இடப்பட்ட சிறுசிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்ட ஒரு பட்டையையும் கொண்டு காணப்படுகிறது.