TNPSC Thervupettagam

களைக் கொல்லிகளைத் தாங்கும் திறன் கொண்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகை

July 21 , 2019 1826 days 653 0
  • களைக் கொல்லிகளைத் தாங்கும் திறன் கொண்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தி (Bt Cotton - HT Bt Cotton) வகையைச் சட்ட விரோதமாக விதைத்ததற்காக 12 விவசாயிகளுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில அரசு காவல் துறையில் புகார் அளித்துள்ளது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986-ன் கீழ், அரசினால் ஒப்புதல் அளிக்கப்படாமல் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவது சட்டவிரோதமாகும்.
  • HT Bt என்பது இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் 3-வது சந்ததியாகும்.
  • க்ரை 1 ab மற்றும் க்ரை 1 ac ஆகியவை இதற்கு முந்தைய சந்ததி இனங்களாகும். இவை பருத்திச் செடிகளில் இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியக் கருவியாகச் செயல்படுகின்றன.
  • Cry 1 Ac மற்றும் Cry 1 Ac என்பது சிறுசிதிலாக்கத்தின் போது பாக்டீரியம் பேசில்லஸ் தூரிங்ஜெனிசிஸினால் உருவாக்கப்பட்ட புரதங்களாகும்.
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்பது பூச்சியிலிருந்துப் பயிர்களைப் பாதுகாக்க தாவரத்தில் Bt போன்ற அதே நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்ய மரபணு முறையில் மாற்றப்பட்ட பயிர்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்