இந்தியத் தேசிய கடல்சார் தகவல் வழங்கீட்டு சேவை மையம் ஆனது, கேரளா, தென் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் இலட்சத்தீவு ஆகியப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஸ்வெல் அலைகள் (கள்ளக் கடல் அலைகள்) ஆனது, அவை தோன்றிய இடத்திலிருந்து வெகு தூரம் பயணிக்கின்ற, நீண்ட அலைநீளம் கொண்ட கடல் அலைகள் ஆகும்.
அவை பொதுவாக சூறாவளிகள் அல்லது பிற வானிலை நிகழ்வுகளால் உருவாக்கப் படுகின்றன.
கடல் அலைகள் பொதுவாக தலக்காற்றின் காரணமாக உருவாகின்றன.
சூறாவளிகள் மற்றும் பிற சக்தி வாய்ந்த காற்றோட்ட அமைப்புகள் காற்றில் இருந்து தண்ணீருக்கு ஆற்றலை மாற்றுவதால், கள்ளக் கடல் அலைகளைத் தலக் காற்றினால் உருவாக்கப்படும் அலைகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறது.
அவற்றின் அதிக ஆற்றல் காரணமாக, கள்ளக் கடல் அலைகள் அதிக தூரம் பயணித்து, கணிசமான அளவு அதிக ஆற்றலுடன் கடற்கரைகளைத் தாக்குகின்றன.
ஸ்வெல் அலைகள் என்பவை இந்தியாவில் கள்ளக் கடல் அலைகள் என்றும் அழைக்கப் படுகின்றன என்பதோடு இது கேரள மீனவர்களால் பயன்படுத்தப் படும் ஒரு பேச்சு வழக்கு சொல்லாகும்.
யுனெஸ்கோ அமைப்பானது இந்த சொல்லினை அறிவியல் ரீதியாகப் பயன்படுத்தச் செய்வதற்கு தற்போது அங்கீகரித்துள்ளது.