உலக வங்கியானது, “கழிவகற்றல் மேம்பாடு: சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் மானியங்கள் குறித்து நன்கு மறுபரிசீலனை செய்தல்” என்ற தலைப்பில் அமைந்த ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
வேளாண்மை, மீன்பிடித்தல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களுக்கான பல்வேறு மானியங்களில் அதிக அளவு பணம் வீணடிக்கப் படுகிறது.
பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளவும், மனிதகுலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதை தவிர்த்து பயனளிக்கும் விதத்திலும் இதனை பயன்படுத்தலாம்.
மூன்று துறைகளில் வழங்கப்படும் மானியங்கள் 7 டிரில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ள நிலையில், இது உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆகும்.
வெளிப்படையான மானியங்கள் அதாவது அந்த மூன்று துறைகளில் அரசாங்கத்தின் நேரடிச் செலவினங்கள் 1.25 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
இது மெக்சிகோ போன்ற பெரிய நாடுகளின் பொருளாதாரத்தின் அளவுக்குச் சமம் ஆகும்.
மறைமுகமான மானியங்கள், அதாவது, மக்கள் மற்றும் கிரகத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் மானியங்களின் மதிப்பானது ஆண்டிற்கு சுமார் 6 டிரில்லியன் டாலர் மதிப்பிற்கும் அதிகமாக உள்ள நிலையில், இதனால் ஏற்படும் பெரும் சுமையை ஏழைகளே எதிர்கொள்கின்றனர்.
2021 ஆம் ஆண்டில் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற மாசுபடுத்தும் எரிபொருட்களின் விலையைப் பெருமளவில் குறைப்பதற்காக என்று உலக நாடுகள் 577 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளன.