TNPSC Thervupettagam

கழிவகற்றல் மேம்பாட்டு அறிக்கை

July 28 , 2023 357 days 226 0
  • உலக வங்கியானது, “கழிவகற்றல் மேம்பாடு: சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் மானியங்கள் குறித்து நன்கு மறுபரிசீலனை செய்தல்” என்ற தலைப்பில் அமைந்த ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • வேளாண்மை, மீன்பிடித்தல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களுக்கான பல்வேறு மானியங்களில் அதிக அளவு பணம் வீணடிக்கப் படுகிறது.
  • பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளவும், மனிதகுலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதை தவிர்த்து பயனளிக்கும் விதத்திலும் இதனை பயன்படுத்தலாம்.
  • மூன்று துறைகளில் வழங்கப்படும் மானியங்கள் 7 டிரில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ள நிலையில், இது உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆகும்.
  • வெளிப்படையான மானியங்கள் அதாவது அந்த மூன்று துறைகளில் அரசாங்கத்தின் நேரடிச் செலவினங்கள் 1.25 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
  • இது மெக்சிகோ போன்ற பெரிய நாடுகளின் பொருளாதாரத்தின் அளவுக்குச் சமம் ஆகும்.
  • மறைமுகமான மானியங்கள், அதாவது, மக்கள் மற்றும் கிரகத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் மானியங்களின் மதிப்பானது ஆண்டிற்கு சுமார் 6 டிரில்லியன் டாலர் மதிப்பிற்கும் அதிகமாக உள்ள நிலையில், இதனால் ஏற்படும் பெரும் சுமையை ஏழைகளே எதிர்கொள்கின்றனர்.
  • 2021 ஆம் ஆண்டில் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற மாசுபடுத்தும் எரிபொருட்களின் விலையைப் பெருமளவில் குறைப்பதற்காக என்று உலக நாடுகள் 577 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்