இந்தியாவில் முதல்முறையாக திடக்கழிவில் இருந்து ஹைட்ரன் உற்பத்தி செய்யச் செய்வதற்கான ஆலை புனே நகரில் அமைக்கப்பட உள்ளது.
கிரீன் பில்லியன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தினால் இந்த ஆலை கட்டமைக்கப் பட உள்ளது.
இது 350 டன் திடக்கழிவுகளில் இருந்து தினமும் 10 டன் அளவு ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும்.
கழிவுகளில் இருந்து பெறப்படும் எரிபொருளானது, பிளாஸ்மா வளிமமாக்கல் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உருவாக்கச் செய்வதற்காகப் பயன் படுத்தப் படும்.