உலகெங்கிலும் உள்ள உணவகங்கள் மற்றும் மது அருந்தகங்கள் கழிவுகளற்ற வகையிலான உணவுப் பரிமாறல் முறையினை வெகுவாக ஏற்றுள்ளன என்பதோடு உணவகங்கள் நிலைத் தன்மையை அணுகும் முறையை மாற்றியும் வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள RE எனப்படும் மது அருந்தகமானது, உலகின் முதல் நிரந்தர “கழிவு இல்லாத” மீளுருவாக்க மதுக் கலவை மது அருந்தகம் மற்றும் உணவகம் ஆகும்.
RE மது அருந்தகமானது மறுசுழற்சி செய்யப்பட்டப் பல்வேறு அலங்கார கூறுகளைப் பயன்படுத்துவதோடு, மறுபயன்பாடுக்கு உட்படுத்தப்பட்டப் பொருட்களால் செய்யப் பட்ட மதுக் கலவை மற்றும் உணவினை வழங்குகிறது.
நன்கு மறுசுழற்சி செய்யப்பட்ட காபிப் பொடிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட காபி மதுபானம் மற்றும் பழங்காலப் பாணியில் வாழைப் பழத்தோல் பாகு ஆகியவை இதில் அடங்கும்.
இந்த உணவகமானது பல்வேறு உணவுக் கழிவுகளை நன்குக் குறைப்பதிலும், நிலைத் தன்மையை நன்கு மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.