கோடெர்மா மாவட்டத்தில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளில் குறிப்பிட்ட மருந்துப் பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப் படுவதால், இந்தப் பறவை இனங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோசாலைகள் (பசுக் காப்பகம்) மற்றும் நகராட்சிகளில் டைக்ளோஃபினாக் இல்லாத விலங்குகளின் சடலங்களை வழங்கச் செய்வதற்கான நெறிமுறை தயாரானவுடன் இந்த உணவகம் செயல்படத் தொடங்கும்.
கோசாலைகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து வரும் கால்நடைகளின் சடலங்கள், 'கழுகுகளின் உணவகம்' என்ற வரையறுக்கப்பட்ட உணவளிக்கும் இடத்தில், (இறந்த விலங்குகளை உண்ணும்) பறவைகளுக்கு உணவாக வழங்கப்படும்.
இந்தப் பறவைகளுக்கு உணவளிக்கும் இடமாக கருதப்படுவதால், திலையா நகர் பரிஷத்தின் கீழ் உள்ள குமோவில் கோடெர்மா ‘கழுகுகளின் உணவகம்' நிறுவப்பட்டு உள்ளது.
கோடெர்மாவில் சுமார் இருபது ஆண்டுகளாக கழுகுகள் காணப் படவில்லை.
அவை 2019 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் மீண்டும் தென்பட்டன.