TNPSC Thervupettagam

கழுகுமலை குடைவரைக் கோவில்கள்

January 29 , 2024 172 days 298 0
  • கழுகுமலையில் உள்ள புகழ்பெற்ற வெட்டுவான் கோயில் மற்றும் சமணர் சரணாலயப் பகுதியினை உள்ளடக்கிய முழு மலைப்பகுதியும் தொல்லியல் துறையின் கீழ் ‘பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவுச் சின்னமாக’ அறிவிக்கப்பட உள்ளது.
  • இது ‘தென்னிந்தியாவின் எல்லோரா’ என்று அழைக்கப் படுகிறது.
  • 'சிற்பிகளின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் தூத்துக்குடியின் வெட்டுவான் கோயில், 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டமைக்கப்பட்ட பாண்டியர் காலத்தின் முழுமையடையாத இந்து குகைக் கோயிலாகும்.
  • இந்தப் பாறை வேலைப்பாடுகள் பாண்டியர் காலத்தின் தெற்கத்தியக் கோவில் பாணியைப் பிரதிபலிக்கின்றன.
  • இந்தக் குடைவரைக் கோயிலில் 122 சிற்பங்கள் உள்ளன.
  • கழுகுமலை சமணப் பாறைகள் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பாறையில் செதுக்கப்பட்ட 'தீர்த்தங்கரர்களின்' உருவங்களுடன் கூடிய பாறை சிற்பங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்