விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5,151.60 ஹெக்டேர் அளவிலான சதுப்பு நிலங்களை கழுவேலி சதுப்பு நிலப் பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
கழுவேலி அல்லது கலிவேலி சதுப்பு நிலமானது தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய நீர்ப் பறவைகள் கூடும் இடங்களில் ஒன்றாகும்.
ஓர் அரிய புலம்பெயர்ந்த உலாவும் பறவையான, சாம்பல்நிற வால் உடைய டாட்லர், நமது நாட்டில் இந்தப் பகுதியிலும் புலிகாட் ஏரிப் பகுதிகளில் மட்டுமே காணப் படுகின்றது.
கழுவேலி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாகத் திகழும்.