TNPSC Thervupettagam

கவச பாய்மர கெளுத்தி மீன்

May 19 , 2024 60 days 129 0
  • CCMB அறிவியலாளர்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்தும் மற்றும் மீன் பிடிப்பில் இழப்பிற்கு வழிவகுக்கும் தீங்கிழைக்கும் வகையிலான மீன்களைக் கண்டறிவதற்கான ஒரு நுட்பத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் நீர்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புக் கவசப் பாய்மர கெளுத்தி மீன்கள் காணப்படுவது மற்றும் அதன் பரவலைக் கண்டறிவதற்கு eDNA அடிப்படையிலான அளவீட்டு PCR மதிப்பீட்டு முறையினை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
  • தென் அமெரிக்கா பகுதியினைச் சேர்ந்த இந்த மீன் இனமானது, ஒரு காலத்தில் அதன் தனித்துவமானத் தோற்றத்திற்காகவும், மீன் தொட்டிகள் மற்றும் மீன் வளர்ப்புப் பகுதிகளில் உள்ள பாசி வளர்ச்சியை அகற்றும் திறனுக்காகவும் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • ஆனால் தற்போது இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள 60% நீர்நிலைகளில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் பரவி உள்ளது.
  • இது மீன்பிடி வலைகளையும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையும் சேதப் படுத்துகிறது.
  • வெனிசுலாவில் உள்ள புயூர்ட்டோ ரிக்கோவின் நன்னீர் நிலைகளில் முதன்முதலில் இந்த மீன்கள் காணபட்டதாக பதிவாகியுள்ளது.
  • இந்த அயல்நாட்டு மீன் இனங்கள் இந்தியாவில் ‘பிசாசு மீன்’ என்று பெயர் பெற்றுள்ளது.
  • மூன்று மாநிலங்களின் நீர்நிலைகளில் இது பரவி வருவதால் 150 வகையான நன்னீர் வாழ் மீன்களுக்கு இது அச்சுறுத்தலாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்