கவாச் 5.0 எனப்படுகின்ற ஒரு மேம்படுத்தப்பட்ட தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பினை அறிமுகப் படுத்துவதற்கான திட்டங்களை மத்திய இரயில்வேத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த கவாச் 5.0 அமைப்பானது ரயில்களுக்கு இடையேயான பயணத் தொலைவினை மிக கணிசமாகக் குறைத்து, ரயில்களைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் இயக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவாச் என்பது இந்தியாவின் உள்நாட்டு தானியங்கி இரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பு ஆகும்.
இதில் இரயில் என்ஜின் ஓட்டுநர் செயல்படத் தவறினால் வேகக் கட்டுப்பாட்டு நிறுத்த அமைப்பினைத் தானாகவே செயல்படுத்துவதன் மூலம் இரயில் மோதல்களை உடனே தடுப்பதற்காக இது உருவாக்கப்பட்டது.
சுமார் 65,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திலான உலகின் நான்காவது பெரிய இரயில் வலையமைப்பை இந்தியா இயக்கி வருகிறது.