TNPSC Thervupettagam

கவாச் அமைப்பு

June 10 , 2023 409 days 226 0
  • கவாச் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பாகும்.
  • இது இந்தியத் தொழில்துறையுடன் இணைந்து ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பால் (RDSO) உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நிலை-4 (SIL-4) தரநிலைகளுடன் கூடிய ஒரு அதிநவீன மின்னணு அமைப்பாகும்.
  • இது ஆபத்தைக் குறிக்கும் சிவப்பு நிற சமிக்ஞை மூலம் ரயில்கள் கடப்பதைத்  தடுத்து பாதுகாப்பை வழங்கச் செய்வதோடு, மோதலையும் தவிர்க்கிறது.
  • பல்வேறு தகுந்த வேகக் கட்டுப்பாடுகளின் படி ஒரு ஓட்டுநர் ரயிலைக் கட்டுப்படுத்தத் தவறினால் இது ரயிலின் நிறுத்தும் தடை அமைப்பை தானாகவே செயல்படுத்துகிறது.
  • கூடுதலாக கவாச் செயல்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்ட இரண்டு இன்ஜின்களுக்கு இடையேயான மோதலையும் இது தடுக்கிறது.
  • இந்த அமைப்பு அவசரகாலச் சூழ்நிலைகளின் போது அவசர உதவி கோரல் அமைப்பு (SoS) மூலம் செய்திகளை அனுப்புகிறது.
  • இதன் கூடுதல் அம்சம் ஒரு வலையமைப்புக் கண்காணிப்பு அமைப்பின் மூலம் ரயில் இயக்கங்களின் செயல்பாடுகளை மையப்படுத்திய நிகழ்நேரக் கண்காணிப்பு ஆகும்.
  • மலிவான மற்றும் SIL-4 சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் ‘கவாச்’ ஒன்றாகும் என்பதோடு, இதன் பிழையின் நிகழ்தகவு 10,000 ஆண்டுகளில் 1 ஆக இருக்கும்
  • தென் மத்திய இரயில்வே (SCR) மண்டலம் இந்த KAVACH - TACS அமைப்பினைச் செயல் படுத்துவதில் முன்னோடியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்