லாங் மார்ச் 4C ராக்கெட் மூலம் கவாஃபென்-5 விண்கலத்தை சீனா, வடக்கு ஷான்சி மாகாணத்திலுள்ள டெய்யூன் விண்வெளி ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கவாஃபென்-5 விண்கலமானது வளிமண்டலத்தையும், நாட்டின் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றான காற்று மாசுப்பாட்டையும் விரிவாக கண்காணிக்கும் (Comprehensive Observation) விண்கலமாகும். இதுவே உலகின் முதல் முழுவதும் நிறமாலையிலான உயர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் விண்கலமாகும்.
லாங்மார்ச் ராக்கெட்டின் 274-வது ஏவுத்திட்டமே இந்த கவாஃபென்-5 விண்கலம் ஆகும்.
இவ்விண்கலம் விரிவான சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்கலமானது சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. இவ்விண்கலம் அதன் உயர் உறுதி புவி கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்டது.
எட்டு ஆண்டு கால வாழ்வுக் காலம் (Life Time) கொண்ட இவ்விண்கலம், சீனாவினால் முதன்முதலாக உருவாக்கப்பட்ட விண்கலமாகும். இது காற்று மாசுபாட்டை கண்காணிக்க பயன்படுகின்றது.