2014 ஆம் ஆண்டு கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையினை கர்நாடக அரசு நிராகரித்து உள்ளது.
பலவீனமான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பதற்கான பரிந்துரையை அது வழங்கியது.
சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தப் பரப்பளவில் அதிகப் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய 37 சதவீதத்தைச் சுற்றுச் சூழல் உணர்திறன் கொண்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை முன்மொழிகிறது.
இதில் 20,668 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஆனது கர்நாடகாவில் 1,500க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மாநில அளவிலான பல நிபுணர் குழு கூட்டங்களை நடத்தி 2015 ஆம் ஆண்டில் இக்குழு இந்த அறிக்கையினை தயாரித்தது.
இந்தக் குழுவானது சுமார் 153 (1,553 கிராமங்களுக்கு மாறாக) கிராமங்கள் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு அதிகம் உள்ளாகக் கூடிய பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.