புதையுண்ட நிலையில் இருக்கும் ஸ்ரீ காசி விஷ்வேஸ்வர கோவிலின் ஒரு பகுதியை தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் அருங்காட்சியகத் துறை அகழ்வாராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியின் போது,
கோயிலின் அடித்தளம் (Adisthana)
கோசமட்டம் மற்றும் சந்திரமட்டம் (மேற்கூரையின் கடைசிப்பகுதி)
கர்ப்பக்கிரக சுற்றுப்பாதை (Pradakshina Pada)
போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
800 வருட பழமையான ஸ்ரீ காசி விஸ்வேஷ்வரா கோயிலானது காகத்திய அரச காலத்தை சேர்ந்தது. தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
காகத்திய வம்ச ஆட்சியின் தலைநகரம் – வாரங்கல்.
ருத்ரமா தேவி காகத்தியா வம்சத்தின் முக்கிய ஆட்சியாளர் ஆவார். அவர் காலம் 1262 – 1289 CE.
இப்பகுதியை கிழக்கு சாளுக்கியர்களிடமிருந்து காகத்தியர்கள் கைப்பற்றினர். காகத்தியர்களிடமிருந்து பாமினி சுல்தான் வம்சம் கைப்பற்றியது. பின்காலத்தில் விஜயநகரப் பேரரசிற்கும், கடைசியாக டெல்லி சுல்தானியத்திற்கும் இப்பகுதி வசமானது.