TNPSC Thervupettagam

காகத்திய கால கோயில் - அகழ்வராய்ச்சி

November 14 , 2017 2438 days 978 0
  • புதையுண்ட நிலையில் இருக்கும் ஸ்ரீ காசி விஷ்வேஸ்வர கோவிலின் ஒரு பகுதியை தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் அருங்காட்சியகத் துறை அகழ்வாராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளது.
  • இந்த அகழ்வாராய்ச்சியின் போது,
    • கோயிலின் அடித்தளம் (Adisthana)
    • கோசமட்டம் மற்றும் சந்திரமட்டம் (மேற்கூரையின் கடைசிப்பகுதி)
    • கர்ப்பக்கிரக சுற்றுப்பாதை (Pradakshina Pada) போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
  • 800 வருட பழமையான ஸ்ரீ காசி விஸ்வேஷ்வரா கோயிலானது காகத்திய அரச காலத்தை சேர்ந்தது. தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
  • காகத்திய வம்ச ஆட்சியின் தலைநகரம் – வாரங்கல்.
  • ருத்ரமா தேவி காகத்தியா வம்சத்தின் முக்கிய ஆட்சியாளர் ஆவார். அவர் காலம் 1262 – 1289 CE.
  • இப்பகுதியை கிழக்கு சாளுக்கியர்களிடமிருந்து காகத்தியர்கள் கைப்பற்றினர். காகத்தியர்களிடமிருந்து பாமினி சுல்தான் வம்சம் கைப்பற்றியது. பின்காலத்தில் விஜயநகரப் பேரரசிற்கும், கடைசியாக டெல்லி சுல்தானியத்திற்கும் இப்பகுதி வசமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்