குவஹாத்தி இந்தியத் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள், பாலின் தூய்மைத் தன்மையை உடனடியாக சரிபார்க்க காகித அடிப்படையிலான உணர்வி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியானது உயிரி உணர்விகள் மற்றும் உயிரி மின்னியல் இதழில் பிரஞ்சல் சந்திரா என்பவரது தலைமையிலான குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
பாலில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் இருப்பு ஆகியவற்றால் பாலின் தரம் மற்றும் தூய்மைத் தன்மை தீர்மானிக்கப் படுகின்றது.