TNPSC Thervupettagam

காகிதமில்லா உரிமம் வழங்கும் செயல்முறை

January 22 , 2020 1642 days 663 0
  • தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையானது (Department of Industry and Internal Trade - DPIIT) பெட்ரோலிய விதிகள், 2002ன் கீழ் பெட்ரோலியச் சேவை நிலையங்களுக்கு காகிதமில்லா உரிமம் வழங்கும் ஒரு செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
  • இந்த உத்தரவைச் செயல்படுத்தும் நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organization - PESO) ஆகும்.
  • PESO ஆனது DPIITயின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு துறையாகும். இந்த இரு அமைப்புகளும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
  • இது வெடி பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றது.
  • PESO ஆனது பின்வரும் சட்டங்களை நிர்வகிக்கின்றது. அவையாவன:
    • வெடிக்கும் பொருள்கள் சட்டம் 1884,
    • பெட்ரோலியச் சட்டம் 1934,
    • வெடிபொருள்கள் சட்டம்,
    • எரியக்கூடிய பொருள்கள் சட்டம் 1952,
    • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்