இது இந்தியாவின் முதலாவது 700 மெகாவாட் மின்சாரத் திறன் கொண்ட மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட ஒரு அழுத்தப்பட்ட கன நீர் உலையாகும் (PHWR - Pressurised Heavy Water Reactor).
காக்ராபர் மின் ஆலையின் முதல் 2 அலகுகள் கனடா நாட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானதாகும்.
இது குஜராத்தில் தபி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தற்பொழுது வரை 540 மெகாவாட் PHWR திறன் கொண்ட மிகப்பெரிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலையானது மகாராஷ்டிராவின் தாராப்பூரில் அமைந்துள்ளது.
இது இந்தியாவினால் முழுவதும் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் 23வது அணுமின் உலையாகும்.
இந்த உலையானது எரிபொருளாக இயற்கை யுரேனியத்தையும் தணிப்பானாக கன நீரையும் பயன்படுத்துகின்றது.
இந்தியாவின் அணு உலைகள் பெரும்பான்மையாக PHWR ஆக உள்ளதாகும்.