TNPSC Thervupettagam

காக்ளியர் பொருத்துதல் விழிப்புணர்வு திட்டம்

May 11 , 2018 2393 days 722 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையானது, ஹரியானாவின் பரிதாபாத்தில் ஹீதா சமுதாய மன்றத்தில் காக்ளியர் பொருத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை (‘Cochlear Implant Awareness Programme’) நடத்தியது.
  • இந்த நிகழ்ச்சியானது இந்திய செஞ்சிலுவைச் சங்கமும் சர்வோதயா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமும் அரசாலும் இணைந்து நடத்தப்பட்டது.
  • ஸ்வர் ஸ்வாகதம் என்று பெயரிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியானது, அரசுத் துறையின் “மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி” (Assistance to Disabled persons - ADIP) என்ற திட்டத்தின்கீழ் வரும் காக்ளியர் பொருத்தும் திட்டத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும்.
  • இரண்டு காதுகளும் கடுமையாக மற்றும் ஆழ்ந்த அளவில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு கேட்கும் திறனை ஏற்படுத்த அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் ஒரு மின்னணு சாதனமே காக்ளியர் பொருத்து கருவியாகும்.
  • மும்பையைச் சேர்ந்த பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகளுக்கான அலி யாவர் ஜங் தேசிய நிறுவனமே (Ali Yavar Jung National Institute for Speech and Hearing Disabilities - AYNISHD) காக்ளியர் பொருத்து சிகிச்சைகளுக்கான அனுமதி வழங்கும் மையமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்