மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையானது, ஹரியானாவின் பரிதாபாத்தில் ஹீதா சமுதாய மன்றத்தில் காக்ளியர் பொருத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை (‘Cochlear Implant Awareness Programme’) நடத்தியது.
இந்த நிகழ்ச்சியானது இந்திய செஞ்சிலுவைச் சங்கமும் சர்வோதயா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமும் அரசாலும் இணைந்து நடத்தப்பட்டது.
ஸ்வர் ஸ்வாகதம் என்று பெயரிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியானது, அரசுத் துறையின் “மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி” (Assistance to Disabled persons - ADIP) என்ற திட்டத்தின்கீழ் வரும் காக்ளியர் பொருத்தும் திட்டத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும்.
இரண்டு காதுகளும் கடுமையாக மற்றும் ஆழ்ந்த அளவில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு கேட்கும் திறனை ஏற்படுத்த அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் ஒரு மின்னணு சாதனமே காக்ளியர் பொருத்து கருவியாகும்.
மும்பையைச் சேர்ந்த பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகளுக்கான அலி யாவர் ஜங் தேசிய நிறுவனமே (Ali Yavar Jung National Institute for Speech and Hearing Disabilities - AYNISHD) காக்ளியர் பொருத்து சிகிச்சைகளுக்கான அனுமதி வழங்கும் மையமாகும்.