காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புத் திட்டத்திற்கான முழுச் செலவையும் இந்தியா வழங்க ஒப்புக் கொண்டதையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுகம் அல்லது KKS துறைமுகமானது, இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தினை யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன் துறை துறைமுகத்துடன் இணைக்கும் நேரடி பயணிகள் கப்பல் சேவையானது சுமார் மூன்றரை மணி நேரத்தில் 111 கி.மீ. (60 கடல் மைல்) தொலைவினைக் கடக்கிறது.