காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) குரங்கம்மை clade Ib மாற்றுருவின் விரைவான பரவல் ஆனது முக்கியமாக (83.4%) பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்புடையது.
இந்த ஆய்வுக் காலத்தில் மிக ஒட்டு மொத்தமாக, தொழில்முறை ரீதியிலான பாலியல் தொழிலாளர்களில் 200/751 (26.6%) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டிலிருந்து, அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளப் பெருந்தொற்றில் DRC நாட்டில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான mpox பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில், சுற்றி உள்ள 17 சுகாதாரப் பகுதிகளிலிருந்து 670 குரங்கம்மை பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் பாதிப்புகளில், 52.4% பெண்கள், மற்றும் 47.6% ஆண்கள் ஆவர்.