TNPSC Thervupettagam

காங்கோ வடிநிலக் காடுகள் - காடுகளின் நிலை குறித்த அறிக்கை 2021

September 23 , 2022 667 days 376 0
  • இந்த அறிக்கையானது மத்திய ஆப்பிரிக்க வன ஆணையத்தால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • மத்திய காங்கோ நதிப்படுகையில் உள்ள மட்கரி நிலங்களைப் பாதுகாப்பதற்கு அதிக முதலீடு மற்றும் ஆராய்ச்சி தேவை என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • ஹைட்ரோகார்பன் ஆய்வு, நீர் உட்புகுதல், பாமாயில் தோட்டம், நீர்மின் ஆற்றல் நிலைய அணைகள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்தப் பகுதி தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
  • ஒரு மட்கரியில் சுமார் 30 ஜிகா டன் அளவு கார்பனைச் சேமித்து வைக்கும் திறன் இருப்பதால், இந்த மட்கரி நிலங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
  • இது முழு காங்கோ வடிநிலக் காடுகளிலும் உள்ள மரங்களின் நிலத்தடி உயிரிப் பொருளுக்குச் சமம்.
  • இவை சுமார் 20 ஆண்டுகள் அமெரிக்கா வெளியிடும் புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளுக்கு இணையான கார்பனைச் சேமிக்கும் திறன் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்