TNPSC Thervupettagam

காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு - சர்வதேச அவசர நிலை

July 19 , 2019 1862 days 639 0
  • உலக சுகாதார அமைப்பானது (WHO - World Health Organisation) காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் எபோலா நோயினைச் சர்வதேச அளவில் பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.
  • WHO ஆனது சர்வதேச “அவசர நிலையை” மற்ற நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச மீட்புப் பணி தேவைப்படுகின்ற ஒரு “அசாதாரண நிகழ்வு” என்று வரையறுக்கின்றது.
  • இது போன்ற ஒரு அறிவிப்பானது சர்வதேச ஈர்ப்பையும் நிதியையும் கொண்டு வரும்.
  • வரலாற்றில் இது போன்ற வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 5-வது அறிவிப்பு இதுவாகும்.
  • இதற்கு முந்தைய அவரச நிலை அறிவிப்புகள் பின்வருமாறு : அமெரிக்காவில் ஏற்பட்ட ஜிக்கா நோய், பன்றிக் காய்ச்சல், போலியோ ஒழிப்பு மற்றும் 2014-16ல் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா நோய்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்