2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 237 ஆக இருந்த காசநோய் பாதிப்பானது 2023 ஆம் ஆண்டில் 17.7 சதவீதம் குறைந்து 195 ஆக குறைந்து உள்ளது.
இது உலகளாவிய 8.3 சதவீதச் சரிவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 27 லட்சம் காசநோய் பாதிப்புகள் பதிவானதாக மதிப்பிடப் பட்டுள்ள நிலையில் அதில் சுமார் 25.1 லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.