காசநோய் பற்றிய உலக சுகாதார அமைப்பின் உலக அறிக்கை 2023
November 12 , 2023 378 days 289 0
இந்தியாவில், 2022 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான காசநோய் பாதிப்பு பதிவானது.
இது உலகளாவிய எண்ணிக்கையில் 27 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
192 நாடுகள் மற்றும் பகுதிகளில், 2022 ஆம் ஆண்டில் 7.5 மில்லியன் மக்கள் காச நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக, 2022 ஆம் ஆண்டில் பதிவான உலகின் காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கையில் 30 அதிக நோய்ப் பாதிப்பு கொண்ட நாடுகள் 87 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.
அதிக நோய்ப் பாதிப்பு உள்ள முதல் எட்டு நாடுகளில், இந்தோனேசியா (10%), சீனா (7.1%), பிலிப்பைன்ஸ் (7.%), பாகிஸ்தான் (5.7%), நைஜீரியா (4.5%), வங்காளதேசம் (3.6%), மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (3.0%) ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 12 சதவீத இறப்பு வீதத்துடன் 2.8 மில்லியன் (28.2 லட்சம்) காசநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.