TNPSC Thervupettagam

காசநோய் மாநாடு

March 18 , 2018 2446 days 948 0
  • புது டெல்லியில் “டெல்லி TB ஒழிப்பு மாநாட்டினை” (Delhi End-TB Summit) தொடங்கி வைத்த பின் காசநோய் இல்லாத இந்தியா என்ற பிரச்சாரத்தை (TB Free India Campaign) பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
  • காசநோய் ஒழிப்பிற்கான தேசிய காசநோய் ஒழிப்பு உத்தி திட்டத்தின் (National Strategic Plan  for TB elimination) செயல்பாடுகளை திட்டப் பணிமுறை வகையில் (Mission mode) முன்னெடுத்துச் செல்வதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
  • காசநோய் ஒழிப்பிற்கான தேசிய காசநோய் ஒழிப்பு உத்தித் திட்டமானது 2025-ல் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிக்க கால இலக்கு வரம்பை நிர்ணயித்துள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation-WHO) தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய நிறுவனம், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் Stop TB Partnership அமைப்பு ஆகியவை  இணைந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளன.
  • இது நீடித்த வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals) காசநோயை உலகளவில் ஒழிக்க இலக்கினைக் கொண்ட SDG 3-னுடைய கால வரம்பான 2030-ஐக் காட்டிலும் 5 ஆண்டுகள் முன்கூட்டிய கால இலக்காகும்.
  • இந்த மாநாடானது 2018-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காசநோய் மீதான ஐ.நா.வின் உயர்மட்ட  அளவிலான    சந்திப்பிற்கான   கூடுமிடத்தை நிர்ணயிக்க உள்ளது. இவ்விடத்தில் தான் ஐ.நா. பொது அவையில்   நாடுகளின் தலைவர்கள் அளவில் காசநோய் பற்றி முதல் முறையாக  விவாதம்  மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்