காசர்கோடு மாவட்டமானது தனது மாவட்ட நிர்வாகத்திற்கான சொந்த மரம், பூ, பறவை மற்றும் இனங்களை அதிகாரப்பூர்வமாக நியமித்த இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
இந்த முடிவானது இப்பகுதியின் வளமான பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் இயற்கை பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது.
இந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ மரம் ‘கஞ்சிரம்’ (ஸ்டரிக்நாஸ் நக்ஸ்-வோமிகா லின்) ஆகும்.
இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட வெண்வயிற்று கடல் பருந்து இனம் மாவட்டப் பறவையாகும்.
காசர்கோடு மாவட்ட நிர்வாகமானது, உள்நாட்டில் ‘பீமனமா’ என்று அழைக்கப்படும் கேண்டரின் ராட்சத மென் ஓடு கொண்ட ஆமையினை மாவட்ட இனமாகத் தேர்வு செய்துள்ளது.
மாவட்ட மலராக ‘பெரிய பொலதலி’ அல்லது கிரினம் மலபாரிகா தேர்வு செய்யப் பட்டு உள்ளது.