தென்னாப்பிரிக்கா கோரிய அவசர நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போர் நடவடிக்கை மீது தென்னாப்பிரிக்கா இனப் படுகொலை வழக்கினைப் பதிவு செய்தது.
காசாவில் இனப்படுகொலைச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனாலும் போர் நிறுத்தத்தினை மேற்கொள்ள அது உத்தரவிடவில்லை.