வாரணாசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இது மத்திய கல்வி அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாத கால நிகழ்வு ஆகும்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி நகரம் (வாரணாசி) மற்றும் தமிழ்நாடு ஆகியவை இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளை மீண்டும் அடையாளம் காண்பதற்கான ஒரு நிகழ்வு இதுவாகும்.
‘திருக்குறள்’ நூல் மற்றும் 13 மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட அதன் மொழிபெயர்ப்பு நூல்களையும் அவர் வெளியிட்டார்.
காசியின் மேம்பாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பை மேற்கோளிட்டுக் காட்டிய பிரதமர், தமிழ்நாட்டில் பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியது குறித்தும் நினைவு கூர்ந்தார்.
காசியில் பல ஆண்டுகள் வாழ்ந்த மாபெரும் கவிஞரும் புரட்சியாளருமான சுப்பிரமணிய பாரதியையும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டு உரையாற்றினார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி அவர்களுக்காக அர்ப்பணிக்கப் பட்ட ஓர் இருக்கையையும் அவர் அறிவித்தார்.