TNPSC Thervupettagam

காசியான்டெப் கோட்டை

February 11 , 2023 655 days 302 0
  • தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஆனது 2,200 ஆண்டுகள் பழமையான ஒரு ரோமானிய நினைவுச் சின்னமான காசியான்டெப் என்ற கோட்டையையும் சீர்குலைத்தது.
  • ஒரு மலை உச்சியில் அமைந்த காசியான்டெப் கோட்டையானது துருக்கியில் காசியான்டெப் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
  • இது 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளின் போது அப்போதைய ரோமானியக் காலத்தில் ஒரு காவற்கோபுரமாக கட்டமைக்கப்பட்டது.
  • கி.பி.527-565 காலத்தின் போது, பைசான்டைன் பேரரசர் ஜஸ்டினியனின் ஆட்சியின் போது, இந்தக் கோட்டை மேலும் மேம்படுத்தப்பட்டு அதன் தற்போதைய வடிவத்தை பெற்றது.
  • இது 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் அய்யூபிட்களின் ஆட்சியிலும், ஒட்டாமான் பேரரசின் ஆட்சியிலும் ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
  • 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற துருக்கியின் சுதந்திரப் போரின் போது இது ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தது.
  • ஒட்டாமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராக அந்த நகரத்தின் பாதுகாப்புத் திறனின் ஓர் அடையாளமாக இது இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்