TNPSC Thervupettagam

காசிரங்காவில் இரண்டு புதிய பாலூட்டி இனங்கள்

February 3 , 2024 167 days 177 0
  • அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங் காப்பகத்தில் (KNPTR) கரடிப் பூனை மற்றும் சிறிய நகங்கள் கொண்ட காட்டு நீர்நாய்  ஆகிய இரண்டு புதிய பாலூட்டி இனங்கள் தென்பட்டுள்ளன.
  • இந்தியாவின் மிகப் பெரிய புனுகுப் பூனை இனமான பிந்துரோங், வலசை போகும் பறவைகளின் கணக்கெடுப்பின் போது தென்பட்டது.
  • சிறிய நகம் கொண்ட காட்டு நீர்நாய் ஆனது உலகின் மிகச்சிறிய நீர்நாய் இனமாகும்.
  • இந்தப் பாலூட்டி இனமானது இந்தியா வழியாக கிழக்கு நோக்கி தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனா வரையான பரவலான நிலப்பரப்புகளில் காணப்படுகிறது.
  • இந்தியாவில், மேற்கு வங்காளம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரளாவின் சில பகுதிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இது பெரும்பாலும் காணப்படுகிறது.
  • இந்தப் பூங்காவில் தற்போது 37 பாலூட்டி இனங்கள் உள்ளதோடு இது அந்தப் பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தையும் மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்