காடர் பழங்குடியினரின் மறுசீரமைப்பு முயற்சி
November 1 , 2024
69 days
134
- முதன்முதலில், கேரளாவின் வாழச்சல் பகுதியினைச் சேர்ந்த காடர் பழங்குடியினர், ஊடுவக் கூடிய அயல் உயிரினங்களால் தரமிழந்த இயற்கைக் காடுகளைத் தீவிரமான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இந்தப் பகுதிகளில் மொத்தம் 29 மற்றும் 31 ஊடுருவல் இனங்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
- காடர் இனத்தவர் முதன்மையாக கேரளா மற்றும் தமிழ்நாடு காடுகளில் வசிக்கும் ஒரு பழங்குடியினச் சமூகத்தவர் ஆவர்.
- காடர் பழங்குடியினர் எளிதில் பாதிக்கப்படக்கூடியப் பழங்குடியினர் குழுவாக (PVTG) வகைப்படுத்தப் பட்டுள்ளனர்.
- "காடர்" என்ற இந்தப் பெயரானது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் காடு என்று பொருள்படும் "காடு" என்ற சொல்லிலிருந்துப் பெறப்பட்டது.
- அவர்கள் தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் தாக்கத்தினைக் கொண்ட காடர் அல்லது காடர்ஸ் எனப்படும் திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.
- அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வன விளைச்சல் பொருட்களைப் பெரிதும் சார்ந்துள்ளனர்.
Post Views:
134