அசாம் மாநிலமானது தனது 3வது காடி பிஹூ அல்லது கொங்காலி பிஹூ என்று அறியப்படும் பிஹூ திருவிழாவை மாநிலம் முழுவதும் கொண்டாடியது.
இந்த பிஹூ திருவிழாவின் மற்ற பெயர்களாவன: ரோங்காலி மற்றும் பொஹாகி பிஹூ.
இந்த திருவிழாக்கள் அசாமிய மாதமான காதி என்பதிலிருந்து இப்பெயர்களை பெறுகின்றன.
காதி பிஹூ விழாக் கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டுவதற்காகவும் மற்றும் அறுவடைகளைப் பெருகுவதற்காகவும் வேண்டுதல் செய்து பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றுகின்றனர்.
இந்தத் திருவிழாவானது இந்த முறை தானியங்கள் ஏதுமின்றி வெறுமையாக இருப்பதால் இது கொங்காலி (வெறுமை) பிஹூ என்றழைக்கப்படுகிறது.