TNPSC Thervupettagam

காடியானா த்விவர்ணா

September 5 , 2022 685 days 614 0
  • இது கர்நாடகாவில் உத்தர கன்னட மாவட்டத்தின் யெல்லாபூர் என்ற ஒரு தாலுகாவில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ள ஒரு புதிய நண்டு இனமாகும்.
  • த்விவர்ணா இந்தியாவில் காணப்படும் 75வது நண்டு இனமாகும்.
  • காடியனா குடும்பத்தினைச் சேர்ந்த காடியானா த்விவர்ணா ஒரு நன்னீர் வாழ் நண்டு இனமாகும்.
  • இந்த நண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க உடல் அம்சம் அதன் நிறமாகும்.
  • இந்த நண்டு வெள்ளை நிற தலையும் ஊதா நிற உடலும் கொண்டது.
  • இது ஒரு விஷத்தன்மை கொண்ட நண்டு என்பதோடு, நிச்சயமாக இது உண்ணத்தக்க நண்டு வகையைச் சேர்ந்ததும் அல்ல.
  • த்விவர்ணா இனம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் உலகில் உள்ள நண்டு இனங்களின் மொத்த எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவற்றில் 75 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
  • 75 இந்திய நண்டு இனங்களில், 13 இனங்கள் இந்தியாவில் உள்ள காடியானா இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.
  • த்விவர்ணா இனமானது காடியானா இனத்தின் கீழ் காணப்படும் 14வது நன்னீர் வாழ் நண்டு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்