TNPSC Thervupettagam

காடுகளின் சிறு உற்பத்திப் பொருட்கள்

May 9 , 2020 1664 days 736 0
  • சமீபத்தில் மத்திய அரசானது காடுகளின் சிறு உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைத் (MSP - Minor Support Price) திருத்தியமைத்துள்ளது. 
  • MFP (Minor Forest Produce) என்பது தாவரத்திலிருந்து உருவாகிய மரம் அல்லாத அனைத்து வன உற்பத்திப் பொருள்களையும் உள்ளடக்கியுள்ளது.
  • இது மூங்கில், பிரம்புகள், தீவனங்கள், இலைகள், கோந்து, மெழுகுகள், சாயங்கள், பிசின் மற்றும் பல்வேறு வகையான  உணவுகளான கொட்டைகள், காடுகளில் விளையும் பழங்கள், தேன், அரக்கு, பட்டு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • MFPகளுக்கான MSP ஆனது மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட விலைப் பிரிவுக் குழுவினால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப் படுகின்றது.
  • MSP என்பது அரசாங்கமானது விவசாயிகள் மற்றும் பழங்குடியினரிடமிருந்து வாங்கப்படும் உற்பத்திப் பொருளின் விலையைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்