TNPSC Thervupettagam

காடுகள் என்பதன் வரையறை - உச்ச நீதிமன்றம்

February 23 , 2024 148 days 197 0
  • உச்ச நீதிமன்றம் ஆனது, ‘காடு’ என்ற சொல் ஆனது தற்போதைக்கு “பரந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய” பொருள் கொண்டதாக இருக்கும் என்றும், 1.97 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அறிவிக்கப்படாத வன நிலங்களையும் உள்ளடக்கும் என்றும் உத்தரவிட்டது.
  • 1980 ஆம் ஆண்டு வன (பாதுகாப்பு) சட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து முன்வைக்கப்படும் மனுக்களைத் தொடர்ந்து இது அறிவிக்கப் பட்டுள்ளது.
  • திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 1A என்ற சட்டப் பிரிவானது, காடுகள் என்ற சொல்லின் வரையறையை 1980 ஆம் ஆண்டிற்குப் பிறகு ‘அரசாங்கப் பதிவேடுகளில்’, அறிவிக்கப்பட்ட காடுகள் மற்றும் நிலங்கள் என பதிவு செய்யப்பட்ட காடுகள் ஆகிய இரண்டு வகைகளுக்குள் "சுருக்கியது அல்லது பொருளிழக்கச் செய்தது".
  • திரும்பவும் தெளிவு பெறுவதற்காக, 1996 ஆம் ஆண்டு T.N. கோதவர்மன் திருமுல்பாடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்ட 'காடு' என்ற சொல்லிற்கு "அகராதியில் உள்ள பொருளினை" கருத்தில் கொள்ளுமாறு நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
  • நீதிமன்றமானது, 'காடு' என்ற சொல்லிற்கு அதன் இயல்பு, வகைப்பாடு அல்லது உரிமையைப் பொருட்படுத்தாமல், பசுமையான பரப்புகளைப் பாதுகாப்பதற்காக ஒரு விரிவான பொருள் வழங்கியுள்ளது.
  • ‘காடு’ என்ற சொல்லானது அரசுப் பதிவேடுகளில் காடுகள் என்று பதிவு செய்யப் பட்டுள்ள நிலங்களை மட்டும் சாராது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • மேலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதி ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் அல்லது ஆணையமும் “விலங்கியல் பூங்காக்கள் அல்லது வனச் சுற்றுலாப் பூங்கா” ஆகியவற்றினை நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்