விரிவான செயற்கைக்கோள் படத்தினை அடிப்படையாகக் கொண்ட நாசாவின் அறிக்கையின்படி, பசுமைத் தாவரங்களின் மிக அதீத வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
2000 ஆம் ஆண்டிற்குப் பின்பு, புவியின் பசுமைத் தாவரப் பகுதியானது 5 சதவிகிதம் அல்லது 2 மில்லியன் சதுர மைல்கள் அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் பசுமைத் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) சீனா மற்றும் இந்தியாவில் உள்ளன. ஆனால் இந்த நாடுகள் புவியின் நிலப்பரப்பில் 9 சதவிகிதம் மட்டுமே பசுமைத் தாவரங்களைக் கொண்டுள்ளது.
சீனா உலக பசுமைத் தாவரப் பரப்பில் 6.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் சீனா 42 சதவிகிதம் காடுகளையும் 32 சதவிகிதம் விளைநிலத்தையும் கொண்டுள்ளது.
22 சதவிகித விளைநிலங்கள் மற்றும் 4.4 சதவிகித காடுகள் ஆகியவற்றுடன் இந்தியா பசுமைத் தாவரப் பரப்பில் 6.8 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.