TNPSC Thervupettagam

காட்டு எருதுகள் - உணவு விலங்கு

December 1 , 2022 726 days 463 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI) அறிவியல் குழுவானது இமயமலை காட்டு எருதுகளை (கவரிமா) உணவு விலங்காக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்த வகைப்படுத்துதலானது, பாரம்பரியப் பால் மற்றும் இறைச்சித் தொழில் துறையின் ஒரு அங்கமாக மாற்றுவதன் மூலம் உயர்நிலைப் பகுதிகளில் வாழும் இந்த பசு வகை விலங்குகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பதற்கு உதவும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
  • காட்டு எருதுகள் பாரம்பரியமாக பழமையான, ஒழுங்கமைக்கப்படாத மற்றும் சிரமங்கள் நிறைந்த ஒரு பருவகால மேய்ச்சல் முறையின் மூலம் வளர்க்கப் படுகின்றன.
  • 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 58,000 காட்டு எருதுகள் உள்ளன.
  • 2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பில் பதிவானதை விட இது சுமார் 25% குறைவாகும்.
  • காட்டு எருதுகளின் பாலில் 78-82% நீர், 7.5-8.5% கொழுப்பு, 4.9-5.3% புரதம், 4.5-5.0% லாக்டோஸ் மற்றும் 12.3-13.4% கொழுப்பு சாராத திடப்பொருள் உள்ளன.
  • பெரும்பாலும் உள்ளூரில் உட்கொள்ளப்படும் காட்டு எருதுகளின் இறைச்சி மெலிந்த தடிமன் உடையதாக அறியப்படுகிறது.
  • இதன் இறைச்சியில் 74.8% ஈரப்பதம், 21.7% புரதம், 1.5% கச்சா கொழுப்பு மற்றும் 1.2% சாம்பல் அளவு (எரிதிறன்) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்