TNPSC Thervupettagam

காட்டுத் தீ பற்றிய ஆய்வு

April 17 , 2022 827 days 414 0
  • கடந்த இருபது ஆண்டுகளில் காட்டுத் தீயின் தீவிரம், அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் தன்மை மற்றும் காட்டுத் தீ ஏற்படும் மாதங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • இது ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளச் சபையினால் வெளியிடப்பட்டது.
  • இந்த ஆய்விற்கு ‘மாறி வரும் பருவநிலையில் காட்டுத் தீ நிகழ்வுகளை மேலாண்மை செய்தல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த இருபது ஆண்டுகளில் காட்டுத் தீ ஏற்படும் நிகழ்வுகள்  பத்து மடங்கு அதிகரித்து உள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள 62 சதவீதத்திற்கும் அதிகமான மாநிலங்கள் அதிதீவிரமான காட்டுத் தீயால் பாதிக்கப்படக் கூடியவை என்றும் இந்த ஆய்வில் கண்டறியப் பட்டு உள்ளது.
  • மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய சில மாநிலங்களில் குறிப்பிடத் தக்க அளவில் காட்டுத் தீ பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்