TNPSC Thervupettagam

காட்டுப்பன்றிகளை வேட்டையாடுதல்

May 30 , 2022 784 days 424 0
  • வேளாண் பயிர்களுக்கு அல்லது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டுப் பன்றிகளை அழிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அரசு அதிகாரம் அளித்துள்ளது.
  • சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளர்கள் இதற்கான பிரதிநிதித்துவ அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
  • 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டமானது, அதன் அட்டவணை I, II, III மற்றும் IV ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு காட்டு விலங்குகளையும் வேட்டையாடுவதைத் தடை செய்கிறது.
  • இந்த அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள வனவிலங்குகளை மாநிலத்தின் தலைமை வனவிலங்குக் காப்பாளரிடம் அனுமதி பெற்ற பின்னரே வேட்டையாடச் செய்யலாம்/கொல்லலாம்.
  • 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் 62வது பிரிவின் கீழ், மாநிலங்கள் அவற்றைக் குறிப்பிட்டு வேட்டையாடுவது என்று அறிவிக்க வேண்டிய வகையில், வன விலங்குகளின் பட்டியலை மத்திய அரசிற்கு அனுப்பலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்